தள்ளிவைக்கப்பட்டுள்ளதா சலார் படத்தின் ரிலீஸ்…? -லேட்டஸ்ட் அப்டேட்!

சலார் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரம்மாண்ட ஹிட் ஆன கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் சலார். நடிகர் பிரபாஸ் பாகுபலிக்கு பிறகு நடித்த…

சலார் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரம்மாண்ட ஹிட் ஆன கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் சலார். நடிகர் பிரபாஸ் பாகுபலிக்கு பிறகு நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வரும் நிலையில் இந்த படம் தான் அவரது கெரியரை காப்பாற்றும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். சலார் படத்தில் ஸ்ருதி ஹாசன், ப்ரித்விராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்து இருக்கின்றனர்.

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான பிரபாஸின் ‘சலார் பார்ட் 1 தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. திரையுலகினருக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை வழங்கும் வகையில் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் தயாரிப்பு குழுவினர் அயராது உழைத்து வருகின்றனர்.

இப்படத்தின் டீசர் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் இம்மாதம் 28 ஆம் திகதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது படத்தின் கிறாபிக்ஸ் பணிகள் முழுமையாக நிறைவடையாததால், படத்தை திட்டமிட்ட திகதியில் வெளியிட இயலாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகக் கூடும் என திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.