இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தனது 100 வது டெஸ்டை இன்று இலங்கைக்கு எதிராக மொஹலியில் இன்று நடைபெறும் போட்டியில் விளையாடவுள்ளார்.
முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டி இது என்பதால் அந்த வகையிலும் இந்த போட்டி அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு எந்த ஒரு சர்வதேச சதமும் அடிக்காத விராட் கோலி 100-வது டெஸ்டிலாவது சதம் காண்பாரா? என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
100-வது டெஸ்ட் போட்டி என்ற இலக்கை எட்டும் 12-வது இந்தியர் என்ற சிறப்பை விராட் கோலி பெற்றுள்ளார்.
விராட் கோலியின் முக்கிய தருணங்கள்
- ரன்மெஷின் என்று ரசிகர்களால் போற்றப்படும் விராட் கோலி, கடந்த 2011-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக கிங்ஸ்டனில் முதல் டெஸ்டை விளையாடினார்.
- தொடர்ந்து 2012-ல் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடைபெற்ற தனது 8-வது டெஸ்ட் போட்டியில் 6-ம் நிலை வீரராகக் களமிறங்கி முதல் சதமடித்தார்.
- சென்னையில் கடந்த 2013-ல் விளையாடிய முதல் டெஸ்டி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக. சதமடித்து, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
- 2016-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நார்த் சவுண்டில் முதல் இரட்டைச் சதமடித்த அவர்,. இதுவரை மொத்தமாக 7 இரட்டைச் சதங்கள் அடித்துள்ளார்.
- தன்னுடைய சொந்த ஊரான டெல்லியில் 3 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார். அங்குக் கடைசியாக 2017ம் ஆண்டு விளையாடி டெஸ்ட் போட்டிகளில் இலங்கைக்கு எதிராகத் தொடர்ச்சியாக இரு இரட்டைச் சதங்கள் அடித்து அசத்தினார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 7 சதங்களும், இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு எதிராக தலா 5 சதங்களும் விராட்கோலி அடித்துள்ளார்.
- இந்தியாவில் 44 டெஸ்டுகளில் விளையாடிய விராட்கோலி, 13 சதங்களும் 12 அரை சதங்களும் அடித்துள்ளார். வெளிநாடுகளில் 55 டெஸ்டுகளில் விளையாடிய விராட் கோலி 14 சதங்களும் 16 அரை சதங்களும் அடித்துள்ளார்.
- 68 டெஸ்டுகளில் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி, 20 சதங்களுடன் 5ஆயிர்தது 864 ரன்கள் எடுத்துள்ளார்.
- 2007க்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடாததால் ,பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி இதுவரை ஒரு டெஸ்டிலும் விளையாடியதில்லை என்பது குறிப்பிடதக்கது.
100-வது டெஸ்ட் கிரிக்கெட் விளையாட இருக்கும் விராட் கோலிக்கு உலகெங்கிலுமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள விராட் கோலிக்கு முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர், கங்குலி உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
The Master Blaster @sachin_rt congratulates @imVkohli on his milestone.
Listen in to that special anecdote from 2011.#VK100 pic.twitter.com/nDPsLDq3Fr
— BCCI (@BCCI) March 3, 2022
அதில், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. இது ஒரு நீண்ட பயணம். நான் நிறைய கிரிக்கெட் விளையாடி உள்ளேன். கடவுளின் கருணையால் இது நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து உடல்தகுதியுடன் இருக்க மிக கடினமாக உழைத்திருக்கிறேன். இச்சாதனை எனக்கும், எனது குடும்பத்தினர், பயிற்சியாளருக்கும் மிகப்பெரிய தருணமாகும் என்று தெவித்துள்ளார்.










