முக்கியச் செய்திகள் தமிழகம்

ஓபிஎஸ் மனைவி மறைவு; நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த சசிகலா

ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு சசிகலா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று காலை விஜயலட்சுமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் காலை உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். விஜயலட்சுமியின் உயிரிழப்புக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கனிமொழி எம்.பி, சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த விஜயலட்சுமி உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தினரை சந்தித்து சசிகலா ஆறுதல் தெரிவித்தார்.
Advertisement:
SHARE

Related posts

தபால்துறை தேர்வுகளை தமிழில் எழுதலாம்; மத்திய அரசு அறிவிப்பு!

Saravana

”நடிகர் ரஜினிகாந்தை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்படும்”- மருத்துவமனை அறிக்கை!

Jayapriya

’இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’- லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை பற்றி எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Gayathri Venkatesan