சூர்யா நடிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் எதற்கும் துணிந்தவன். இதில், ஹீரோயினாக ப்ரியங்கா மோகன் நடித்துள்ளார். இது சூர்யாவுக்கு 40வது படமாகும். இந்த படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ், சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காரைக்குடியில் நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், 51 நாட்களாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறைவடைந்தது. மழை, வெயில் பாராமல் கடினமாக உழைத்ததால் இது சாத்தியமானது என தெரிவித்துள்ளார்.