அதிமுகவை சேர்ந்த அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
அவருடன் நமது தலைமைச்செய்தியாளர் (சென்னை) தேவா இக்னேசியஸ் சிரில் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுக சாமி ஆணைய அறிக்கை குறித்து பதிலளித்துள்ள வி கே சசிகலா, தங்களுக்கு எதிரான நடவடிக்கை , எம்.ஜி.ஆர் மறைந்தவுடன் 1987 டிசம்பரிலேயே தொடங்கிவிட்டது, அதனுடைய தொடர்ச்சியாகவே இதனைப் பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து பேசிய தனக்கு மட்டுமல்ல, தனக்கு கிடைக்கும் வெற்றி எதுவானாலும் அது மக்களுக்கு சேரும் என்றார். ஜெய கணபதி கோயிலை பொறுத்தவரை ஜெயலலிதாவும் தானும் சேர்ந்து விநாயகரை வைத்தோம் என நினைவு கூர்ந்தார்.
வீடியோ பேட்டியைக் காண – https://www.youtube.com/watch?v=zUDJ19N53Sk
மக்கள் தங்கள் கஷ்டங்களை யாரிடம் சொல்வது என இருக்கிறார்கள். இப்போது உள்ள அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கமாக தெரியவில்லை. நான் புரட்சிப்பயணம் செல்லும்போது மக்கள் குறைகளை சொல்கிறார்கள் என தெரிவித்தார். முதியோர் உதவித்தொகை வரவில்லை என்கிறார்கள் என்றார்.
ஓ.பன்னீர்செல்வம் கருத்து குறித்து நியூஸ் 7 தமிழ் தலைமை செய்தியாளர் சிரில் தேவா எழுப்பிய கேள்விக்கு, அதிமுக ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டும் என சொல்லி வருவதாகவும், முதலில் வந்துள்ளார் ஒ பன்னீர்செல்வம். போகப்போக எல்லாம் சரியாகிவிடும், நிச்சயம் நல்லபடியாக நடக்கும் என்றும் வி.கே.சசிகலா பதிலளித்தார்.
மக்களுக்காக எதிர்க்க வேண்டிய விசயங்களை, போராடி பெற்றுத்தருவோம். எம் ஜி ஆர் மறைவிற்குப் பிறகு ஜெயலலிதாவின் கையைப் பிடித்து அன்றுமுதல் ஜெயலலிதாவுடனே இருக்கிறேன் என்றார். ஆரம்பத்திலிருந்தே இரண்டு பெண்கள் ஒன்று சேர்ந்து இந்த அளவிற்கு சாதித்து காட்டியிருக்கிறோம். தனக்கு இது பெரிதாக தெரியவில்லை.
ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த வி.கே.சசிகலா, இது 1987 டிசம்பரிலேயே தொடங்கிவிட்டது என்றும் அதனுடைய தொடர்ச்சியாகவே இதனை பார்க்கிறேன் என்றும் பதிலளித்துள்ளார்.
-இரா.நம்பிராஜன்