முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: பழனிசாமி

சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சேலம் ஓமலூரில் அதிமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த பழனிசாமி, தமிழகம் முழுவதும் கடுமையான தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது. மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். ஆகவே, தடுப்பூசி மையம் தொடர்பான விவரங்களை அரசு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். எண்ணிக்கையை ஏற்றவாறு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்தனர்,  தற்போது குழு அமைத்துள்ளனர். நீட் தேர்வு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு வந்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தான் செயல்படுத்த முடியும் என தெரிந்தும் கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்  எனக் குற்றம்சாட்டினார் பழனிசாமி.  “

மேலும், சசிகலா அதிமுகவில் இல்லை, சசிகலாவுக்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்ற அவர், 10 பேர் அல்ல  ஆயிரம் பேரிடம் பேசினால் கூட எங்களுக்கு கவலை இல்லை” என்றும் விளக்கிய அவர், குறை சொல்வதை விட்டு விட்டு தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுங்கள் எனவும் கூறினார். 

Advertisement:
SHARE

Related posts

ஜனநாயகக் கடமையாற்றிய நடிகர் சூர்யா, கார்த்தி

Halley karthi

ராமநாதபுரத்தில் தப்பியோடிய கைதி கைது; 3 காவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்!!

Jayapriya

இன்று முதல் தேநீர் கடைகளை திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி!

Vandhana