சன்னிலியோன் நடனமாய சமீபத்திய வீடியோ தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு சரிகம தயாரிப்பு நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
கிருஷ்ணர்- ராதையின் காதலை பேசும் ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ பாடலுக்கு நடிகை சன்னிலியோன் நடனமாடிய வீடியோ ஒன்றை சரிகம நிறுவனம் வெளியிட்டது. இந்த வீடியோ இந்துமக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருப்பதாக உத்தரபிரதேசத்தின் இந்து சாமியார்கள் கண்டனம் தெரிவித்தனர். பாடலை நீக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றம் செல்வோம் என்றும் நடிகை சன்னிலியோன் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும் மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவும் சர்ச்சைக்குறிய பாடலை 3 நாட்களுக்குள் நீக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்நிலையில் இப்பாடலை தயாரித்து வெளியிட்ட சரிகம தயாரிப்பு நிறுவனம் ‘ 3 நாட்களுக்குள் பாடலின் வரிகளில் மாற்றம் செய்யப்பட்டு விரைவில் புதிய வரிகளுடன் பாடல் வெளியிடப்படும்’ என்று தெரிவித்துள்ளது.
Advertisement: