சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் குறித்த அப்டேட் வெளியீடு!

‘டிக்கிலோனா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில், சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள  ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் பிப்ரவரி 2-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சந்தானம் ‘டிக்கிலோனா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகியுடன்…

‘டிக்கிலோனா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில், சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள  ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் பிப்ரவரி 2-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சந்தானம் ‘டிக்கிலோனா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகியுடன் மீண்டும் இணைந்துள்ளார். இந்தப் படத்தை பீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் தயாரிக்கிறார். இப்படத்திற்கு ‘வடக்குப்பட்டி ராமசாமி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘விட்னஸ்’ பட இயக்குநர் தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சந்தானம் வெளியிட்டுள்ளார். பிப்ரவரி 2 சும்மா சில்லு சில்லுனு வரோம் எனவும் ட்வீட் செய்துள்ளார். இந்நிலையில், திரைப்படம் வரும் பிப்ரவரி 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படம் குறித்து வீடியோ ஒன்றும் சந்தானம் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே டிடி ரிட்டர்ன்ஸ் மற்றும் 90ஸ் பில்டப் போன்ற படங்கள் மூலம் சந்தானம் தற்போது திரையுலகில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில், இந்த படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.