சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’ படம் ஜி5 ஒரிஜினலில் அக்டோபர் 13 ஆம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்தில் தம்பி ராமையா, முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். அபிராமி ராமநாதன் தயாரிக் கிறார்.
படம் பற்றி சமுத்திரகனி கூறும்போது, ‘மனித மனம் வேடிக்கையான முறையில் நடந்து கொள்கிறது. நம்மால் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. இதுதான் இந்தப்படத்தின் அடிப் படை கரு. அனைவராலும் இப்படத்தின் கதையை உணர்ந்து கொள்ளமுடியும். இந்த கதை பார்வையாளர்களுடன் உரையாடும்’ என்றார்.
தம்பி ராமையா கூறும்போதும், ‘இந்த கதை அனைத்து மக்களையும் இணைக்கும்விதமாக இருக்கும். பார்வையாளர்கள் ஒரு தத்துவ நாவலை முடிப்பது போல் உணர்வார்கள், விரும்புவார்கள்’ என்றார்.
நடிகை சஞ்சிதா ஷெட்டி படம் பற்றி கூறும்போது, ‘அனைத்து பெற்றோர்களும் குழந்தை களும் இந்த படத்தை முழுமையாக விரும்புவார்கள். இது ஒரு குடும்ப பொழுதுபோக்காக இருக்கும். இந்த படத்தில் நடித்ததை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.








