தமிழ்நாட்டில் சாம்சங் நிறுவனம் தொழில் தொடங்குவதற்காக 1,588 கோடி ரூபாய் மதிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தமிழ்நாட்டில் சாம்சங் நிறுவனம் தொழில் தொடங்குவதற்காக, 1,588 கோடி ரூபாய் மதிப்பில், புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. பின்னர் நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் சாம்சங் நிறுவனம் முதலீடு செய்வதால் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் எனவும், புதிய திட்டம் மேலும் வளர வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: நீட் விலக்கு மசோதா – குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி
முன்னதாக, சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், 34 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட அதிநவீன இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை அரங்கத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நாட்டிலேயே முதல் முறையாக, மாநில அரசின் மருத்துவமனையில், திறக்கப்பட்ட அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கம் இதுவே ஆகும். இந்த அறுவை சிகிச்சை அரங்கை பார்வையிட்டு, அங்குள்ள உபகரணங்கள் மற்றும் அவை செயல்படும் விதம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயரதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








