29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

சமந்தா – விஜய் தேவரகொண்டா காம்போவில் “குஷி”…. டிரெய்லர் வரும் 9-ஆம் தேதி வெளியீடு!

நடிகை சமந்தா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் “குஷி” திரைப்படத்தின் டிரெய்லர் வரும் 9-ஆம் தேதி வெளியாகிறது. 

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக பல்வேறு படங்களில் நடித்து வருபவர் சமந்தா. இவருடன் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குஷி’. இப்படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த திரைப்படத்தை, ஷிவா நிர்வாணா இயக்கியுள்ளார். தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து, போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்து உள்ளார்.

இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ரோஜா நீதான் எனத் தொடங்கும் பாடல் விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி சமூக வலைதளத்தில் 7 கோடி பார்வையாளர்களை கடந்து நல்ல வரவேற்பை பெற்றது. அண்மையில் இந்த படத்தின்டைட்டில் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வரும் 9-ஆம் தேதி வெளியிடப்படும் என ஒரு போஸ்டருடன் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading