தான் நடித்துள்ள ‘ராதே’ படத்தை பைரஸியில் பார்க்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் சல்மான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், திஷா பதானி, ஜாக்கி ஷெராஃப், பரத், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடித்துள்ள படம், ’ராதே’. இந்தப் படம் ரம்ஜானுக்கு ரிலீஸ் ஆனது. கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், ஜீ சினிபிளக்ஸ் ஓடிடி தளத்தில் ரூ.249 கட்டணத்தில் வெளியாகி உள்ளது.
ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆன சில நிமிடங்களிலேயே, பைரஸி தளங்களிலும் இந்தப் படம் வெளியானது. இது நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பைரஸியில் பார்க்கும் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார், நடிகர் சல்மான் கான்.
இதுபற்றி ட்விட்டரில் அவர், ரூ.249 என்ற நியாயமான கட்டணத்தில் ’ராதே’ படத்தைவெளியிட்டுள்ளோம். ஆனால், பைரஸி தளங்கள் சட்டவிரோதமாக இந்தப் படத்தை வெளியிட்டு வருகின்றன. இது கடுமையான குற்றம். சைபர் கிரைம் போலீசார், இந்த சட்டவிரோத பைரஸி தளங்கள் குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் ரசிகர்கள் இந்த திருட்டுத்தனத்தில் பங்கேற்க வேண்டாம். சைபர் கிரைம் போலீசார் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார்.







