முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காவு வாங்க காத்திருக்கும் நீர்த்தேக்க தொட்டி!

ஓமலூர் அருகே கே.மோரூர் கிராமத்தில் காவு வாங்க காத்திருக்கும் நிலையில் இடிந்து விழும் நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டி எப்போது யார் தலையில் விழும் என்ற அச்சத்தால் உடனடியாக அந்த நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி ஒன்றியம் கணவாய் புதூர் ஊராட்சி கே மோரூர் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்க மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. தீவட்டிபட்டியிலிருந்து பொம்மிடி செல்லும் சாலையை ஒட்டிய பகுதியில் அமைக்கப்பட்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்து ஆங்காங்கே கான்கிரிட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு ஆபத்தான நிலையில் உள்ளது. வேகமாக சூறைகாற்றி வீசினால் உடனே விழுந்துவிடும் நிலையில் இந்த தொட்டி உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பாடு நிறுத்தப்பட்டது. நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர். உயிர் சேதம் ஏற்பட்ட பின்புதான் நடவடிக்கை எடுப்பார்களா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நீர்த்தேக்க தொட்டியை அகற்றி பொது மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என புதூர் ஊராட்சி கே மோரூர் பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மதுரை ஆதீனம் அருணகிரி நாதரின் வாழ்க்கைப் பயணம்

G SaravanaKumar

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை

Arivazhagan Chinnasamy

நான்காம் முறை விசாரணைக்கு வந்துள்ளேன்; விரக்தியில் நடிகர் சூரி

EZHILARASAN D