ஊரடங்கு காரணமாக சேலத்தில் இருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்பட்டு வந்த விமான சேவை நாளை முதல் 10 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக விமான நிலைய இயக்குனர் அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமலாபுரத்தில் இருந்து சென்னைக்கு தினசரி பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. இதனால் விமான சேவை பத்து நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக சேலம் விமான நிலைய இயக்குனர் ரவீந்திர வர்மா தெரிவித்துள்ளார்.
அதன்படி வருகிற 22ம் தேதி வரை விமானங்கள் இயக்கப்படாது என்றும், அலுவலகப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவசர தேவைகளுக்காவும், மருத்துவத் தேவைகளுக்காகவும் மட்டும் விமானம் இயக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.







