நியாய விலை கடையில் வழங்கப்பட்ட தரம் இல்லாத கடலையை தெருவில் கூவி விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்த ஆவுடையானூரில் உள்ள நியாய விலை கடையில் பொது விநியோகம் செய்யப்பட்ட கொண்டைகடலை தரமில்லாமல், புழு பூச்சிகள் நிறைந்து இருந்ததால், வாங்கிய கடலையின் நிலையை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக தெருவில் வைத்து கூவி கூவி ஒருவர் விற்பனை செய்துள்ளார்.
தரமில்லாத கடலையை விநியோகித்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.







