முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் பாதுகாப்பான ஷாப்பிங்; நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு: மக்கள் கோரிக்கைகள் என்னென்ன?

சென்னையில் மக்கள் பாதுகாப்பான முறையில் ஷாப்பிங் செய்ய வணிக வளாகங்களில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சி கள ஆய்வு மேற்கொண்டது.

விஜயதசமி, ஆயுத பூஜை அடுத்ததாக தீபாவளி என பண்டிகை காலம் என்பதால் ஷாப்பிங் செல்ல மக்கள் தி.நகர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் படையெடுப்பார்கள். இந்நிலையில், சென்னையில் பல்வேறு முக்கியப் பகுதிகளில் நியூஸ்7 தமிழ் செய்தியாளர்கள் கள ஆய்வில் ஈடுபட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னையில் பொதுமக்கள் ஷாப்பிங் செய்யும் பகுதி என்றால் அது சென்னை, திநகர், ரெங்கநாதன் தெரு தான். இங்குள்ள பல பெரிய வணிக நிறுவனங்கள்
தீயணைப்பான் உட்பட அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படுவதாகவும், பெரு நிறுவனங்களின் கடைகளின் வெளியே உணவு விற்க சாலைகள் ஆக்கிரமிப்பு
வணிக வளாகங்கள் மக்களுக்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தீத்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

"பாதுகாப்பான ஷாப்பிங்" | பிரச்சனை என்ன? | 04.10.2022

மாம்பலம் ரயில் நிலையத்தையும் தி.நகர் பேருந்து நிலையத்தையும் இணைக்கும் ஆகாய நடைபாதை பணிகள் நடைபெற்று வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் சென்னை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் அமைக்கப்படும் வரும் ஆகாய நடைபாதையை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை பாண்டிபஜார் வணிகப் பகுதியில், Topic Cards முறையான பாதுகாப்பு அம்சங்கள் இன்றி இயங்கும் பெருநிறுவனங்களின் மினி அவுட்லெட்கள் அடுத்தடுத்து கடைகள் அமைக்கப்பட்டு இருப்பதால், தீ விபத்து உள்ளிட்ட சம்பவங்களில் சங்கிலி பாதிப்புக்கு உள்ளாகும் கடைகள் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய கடைகளில் அவசர காலங்களில் வெளியேற ஒரே வழி மட்டுமே காணப்படுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஷாப்பிங் வசதிகளை மேற்கொள்ளாத வணிக நிறுவனங்கள், பாண்டி பஜாரில் உள்ள உணவு சிற்றுண்டிகள் விற்கப்படும் உணவு பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளின் தரம் குறித்து தொடர் கண்காணிப்பு தேவை எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram