சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. நாளை முதல் வரும் 19 ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது. கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில்…

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. நாளை முதல் வரும் 19 ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதம்
நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு தமிழ்
மாதம் பிறக்கும் போதும் ஐந்து நாட்கள் சிறப்பு பிராத்தனை நடைபெறும்.

அந்த வகையில் ஆனி மாத பூஜைக்காக நடை இன்று மாலை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைத்து தீபாராதனை காண்பித்தார். அதைத் தொடர்ந்து நாளை முதல் வரும் 19 ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது.

இதற்காக ஏற்கனவே ஆன்லைனில் முன் பதிவு செய்யப்பட்ட நிலையில் கொரோனோ நெறிமுறைகளை கடைபிடித்து பக்தர்கள் வழிபாடு செய்யவுள்ளனர்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.