புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள்!

ரஷ்யாவில் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகிலேயே மிக கொடூரமான நோயாக புற்று நோய் உள்ளது. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் கீமோதெரபி, கதிர்வீச்சு மருத்துவ முறைகளை எடுத்துக்கொள்கின்றனர்.

இந்த நிலையில் ரஷ்யாவில் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பு ஊசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்ய ஆராய்ச்சியாளர்களால் கண்டு பிடிக்கப்பட்ட இந்த தடுப்பூசிக்கு ‘என்ட்ரோமிக்ஸ்’  என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி புற்றுநோய்க்கு எதிரான 100 சதவீத செயல் திறனை காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்  எம்.ஆர்.என்.ஏ வகையைச் சேர்ந்த இந்த தடுப்பூசி புற்றுநோய் கட்டிகளை வெற்றிகரமாக அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி ஏற்கனவே ரஷ்யாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட  மையங்களில் ஆரம்பகட்ட பயன்பாட்டில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு இந்த தடுப்பூசி பொதுப் பயன்பாட்டுக்கு விடப்படும் என்று  எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.