முக்கியச் செய்திகள் உலகம்

இலக்கை எட்டும்வரை போர் தொடரும்: ரஷ்யா

ரஷ்யாவின் நோக்கம் நிறைவேறும் வரை உக்ரைன் மீதான தாக்குதல் தொடரும் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் செர்கி ஷோய்கு தெரிவித்துள்ளார்.

தலைநகர் மாஸ்கோவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு அதிக அளவில் பொருளாதார, ஆயுத உதவிகளை வழங்கி வருவதையும், ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்திருப்பதையும் சுட்டிக்காட்டினார். இருந்தபோதும், ரஷ்யாவின் நோக்கங்கள் நிறைவேறும் வரை சிறப்பு ராணுவ நடவடிக்கை தொடரும் என அவர் குறிப்பிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வேண்டும் என்றே சிறப்பு ராணுவ நடவடிக்கை நிதானமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அப்பாவி மக்கள் உயிரிழப்பதை தடுக்கவே இந்த நிதானம் கடைப்பிடிக்கப்படுவதாகக் கூறினார்.

ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடைகளால் தங்கள் ராணுவத்தை தடுத்து நிறுத்த முடியாது என தெரிவித்த செர்கி ஷோய்கு, உலகில் 109 நாடுகளுடன் ரஷ்யா ராணுவ உறவு கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

மாஸ்கோவில், வரும் ஜூன் மாதம் சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளதாகத் தெரிவித்த செர்கி ஷோய்கு, இதில், 109 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க இருப்பதாகத் தெரிவித்தார். இது உலகின் மிகப் பெரிய ராணுவ மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“சமத்துவ சிலையானது” தேச ஒருமைப்பாட்டின் அடையாளமாகத் திகழ வேண்டும்-முதலமைச்சர்

Halley Karthik

1 முதல் 5-ம் வகுப்பு வரை காலாண்டு விடுமுறை நீட்டிக்க வாய்ப்பு

G SaravanaKumar

விடுதலை ட்ரெய்லர் & இசை வெளியீட்டு விழா எப்போது? – வெளியான புதிய தகவல்

Yuthi