கேஜிஎஃப்-2 திரைப்படம் வெளியான நாள் முதல் பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதுவரை ரூ.1227 கோடி வசூலாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான கேஜிஎஃப். திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மாதம் 14ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தை ஹோம்பேல் பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
https://twitter.com/ManobalaV/status/1529097604079923200
படம் வெளியாகி ஒரு மாதம் கடந்த நிலையிலும், கேஜிஎஃப்- 2 பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சக்கபோடு போட்டு வருகிறது. இப்படம் வெளியாகி 41 நாட்களுக்குப் பிறகும், பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு இழுத்து வருவதோடு, படம் வெளியானது முதல் பல சாதனைகளை படைத்து வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மொத்தம் ரூ.1227 கோடியை ஈட்டியுள்ளது.
இதுகுறித்து வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன், கேஜிஎப் படம் வெளியாகி 41வது நாளான நேற்று மட்டும் ரூ.1.87 கோடி வசூல் செய்துள்ளது என ட்வீட் செய்துள்ளார், மேலும், “#KGFChapter2 படம் வெளியான முதல் வாரம் முதல் 5வது வாரம் வரை – ரூ.1210.53 கோடி வசூல் செய்துள்ளது. 6வது வாரத்தில் சுமார் ரூ.14 கோடி வரை வசூல செய்துள்ளதாகவும், இதுவைர மொத்தம் – ரூ.1227 கோடி வரை வசூலாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.







