மனித கைகளின் மற்றொரு விரலாக செல்போன் மாறிவிட்டது. செல்போன் இல்லாத ஒரு நாளையோ, இண்டர்நெட் இல்லாத ஒரு மணி நேரத்தையோ எண்ணி பார்க்க நம் மனம் விரும்புவதில்லை. அந்த அளவு நாம் வாழ்வினில் செல்போன்கள் ஊடுருவியுள்ளது.
நாள்தோறும் செல்போன்களின் வந்து குவியும் தரவுகளால் ஸ்டோரேஜ் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் முக்கிய மான புகைப்படங்கள், வீடியோக்கள், மற்றும் கோப்புகளை டெலிட் செய்ய வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம்.
உங்கள் செல்போனில் உள்ள ஸ்டோரேஜை அதிகரிக்க உதவும் 5 வழிகளை இந்த தொகுப்பில் காண்போம்…!
1. Cache மற்றும் App Data-வை அழிக்கவும்
ஆப்கள் காலப்போக்கில் சேரும் தரவைச் சேமித்து, ஸ்டோராஜை நிறைத்து விடுகின்றன. ஆண்ட்ராய்டில், Cache-சை அழிக்க நீங்கள் Settings > Storage > Cached Data என்பதற்குச் செல்லலாம். அதே போல் ஐபோனில் Settings > General > iPhone Storage என்பதற்குச் சென்று “Offload Unused Apps” என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் செயலிகளை ஆஃப்லோட் செய்யலாம். இது செயலிகளை நீக்காமலேயே ஸ்டோரேஜை விடுவிக்கும்.
2. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை Review செய்யவும்
உங்கள் செல்போனின் புகைப்பட gallery நீங்கள் நினைப்பதை விட அதிக ஸ்டோரேஜை பயன்படுத்தக்கூடும். அது எவ்வளவு இடத்தை எடுத்துக்கொள்கிறது என்பதைச் சரிபார்க்க, Settings > General > [device] Storage என்பதற்குச் சென்று, புகைப்படங்கள் section-யை கண்டறியவும். அது ஒரு ஜிகாபைட்டிற்கு மேல் இடத்தை எடுத்துக்கொண்டால், உங்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் கிளவுட் சேமிப்பகத்தில் பதிவேற்றுங்கள்.
backup-பிற்கு கூகிள் போட்டோஸ் அல்லது அமேசான் போட்டோஸ் சிறந்த தேர்வுகளாகும்.
3. தேவையற்ற பைல்களை அகற்றவும்
உங்கள் செல்போன்களில் தேவையற்ற கோப்புகள் இருக்கக்கூடும். இவற்றில் திரைப்படப் பதிவிறக்கங்கள், app installation files, old documents ஆகியவை அடங்கும். இவற்றை உங்கள் சாதனத்திலிருந்து நீக்குவது கணிசமான இடத்தை விடுவிக்கும்.
4. லைட் செயலிகள் அல்லது Web Version-களை பயன்படுத்தவும்
சமூக ஊடகத் தளங்கள் உள்ளிட்ட சில ஆப்கள் கணிசமான ஸ்டோரேஜை எடுத்துக்கொள்ளக்கூடும். ஃபேஸ்புக் அல்லது ஸ்னாப்சாட் போன்ற செயலிகள் அதிக ஸ்டோரேஜை எடுத்துக்கொள்ளும் செயலிகளுக்கு பதிலாக, அவற்றின் “லைட்” பதிப்புகளை பதிவிறக்கி கொள்ளலாம் அல்லது அவற்றின் Web Version-களை பயன்படுத்தலாம். லைட் செயலிகள் சிறப்பாகச் செயல்படுவதோடு, குறைந்த இடத்தையும் எடுத்துக்கொள்வதால், மற்ற முக்கியமான தரவுகளுக்கு உங்களுக்கு அதிக இடம் கிடைக்கிறது.
5. Cloud ஸ்டோரேஜை பயன்படுத்துங்கள்
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான Google Drive மற்றும் iOS பயனர்களுக்கான ஐ-கிளவுட் போன்ற Cloud ஸ்டோரேஜை பயன்படுத்துவது உங்கள் ஸ்டோரேஜை திறம்பட நிர்வகிக்க உதவும். உங்கள் ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கிளவுடில் பதிவேற்றுவதன் மூலம், உங்கள் சாதனத்தில் பெரும் ஸ்டோரேஜை மிச்சப்படுத்தலாம். பல கிளவுட் சேவைகள் நெகிழ்வான திட்டங்களை வழங்குகின்றன, எனவே தேவைக்கேற்ப நீங்கள் அளவை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும்.







