RTE மாணவர் சேர்க்கை: 1.10 லட்சம் இடங்களுக்கு 1.42 லட்சம் பேர் விண்ணப்பம்

RTE மாணவர் சேர்க்கைத் திட்டத்தில் தனியார்  மெட்ரிக் பள்ளிகளில் உள்ள 1.10  இடங்களில் சேர 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார்…

RTE மாணவர் சேர்க்கைத் திட்டத்தில் தனியார்  மெட்ரிக் பள்ளிகளில் உள்ள 1.10  இடங்களில் சேர 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை, எளிய குழந்தைகள் சேர்க்கப்படுவர். இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இத்திட்டத்தில் மாநிலம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன.

இந்நிலையில், நடப்பு ஆண்டு இலவச கல்வி மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி தொடங்கியது.

மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை தகுதியானவை / தகுதியற்றவை என்று சான்றிதழ்களின் அடிப்படையில் ஆய்வு செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. மே 18-ஆம் தேதியுடன் விண்ணப்பிக்கும் அவகாசம் நிறைவடையும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மே 25 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் உள்ள 1.10 லட்சம் இடங்களில் சேர 1.42 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். மொத்த இடங்களை விட கூடுதல் விண்ணப்பம் வந்துள்ள பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழகம், கல்வி அதிகாரிகள், பெற்றோர்கள் முன்னிலையில் குலுக்கல் நடைபெற்று வருகிறது.

குலுக்கலில் தேர்வானோர் விவரம் பள்ளியின் தகவல் பலகையில் பின்னர் வெளியிடப்படும்  என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.