7 லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடிய பட்டதாரி இளைஞர் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பரமேஸ்வர மங்கலம் கிராமத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் விஜயகுமார், வேலையின்றி இருந்துள்ளார். இவர் தாய் நடத்திவரும் தள்ளுவண்டியில் டிபன் கடையில் வியபாரத்தை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர், பலரிடம் 7 லட்ச ரூபாய் வரை கடன் பெற்று, அதனை இழந்துள்ளார். கடனை கேட்டு நெருக்கடி கொடுத்ததால், மனஉளைச்சலுக்கு ஆளான விஜயகுமார் பூச்சி மருந்தை குடித்து உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







