வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 4வது டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் அரை சதம் அடித்து அசத்தினர். தொடர்ந்து நன்றாக விளையாடிய இந்திய அணி 17 ஒவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
5 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு அணியும் தலா இரண்டு வெற்றிகளை பெற்று சமனில் உள்ள நிலையில், 5-வது மற்றும் இறுதி டி 20 போட்டி இன்று நடைபெறவுள்ளது







