25 வருடத்திற்கு மாதமாதம் ரூ.5.6 லட்சம் – துபாய் லாட்டரியில் தமிழருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

25 வருடத்திற்கு மாதமாதம் ரூ.5.6 லட்சம்  பரிசுத் தொகையாக துபாய் லாட்டரியில் தமிழருக்கு விழுந்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. வாழ்க்கையில அதிர்ஷ்டம் ஒரு முறை தான் உங்க கதவ தட்டும் என பிரபலமான  படத்தின்…

25 வருடத்திற்கு மாதமாதம் ரூ.5.6 லட்சம்  பரிசுத் தொகையாக துபாய் லாட்டரியில் தமிழருக்கு விழுந்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாழ்க்கையில அதிர்ஷ்டம் ஒரு முறை தான் உங்க கதவ தட்டும் என பிரபலமான  படத்தின் வசனம் உள்ளது.  அதிர்ஷ்டம் அவ்வளவு சுலபமாக கிடைத்துவிடுவதில்லை. நாம் எவ்வளவுதான் முயற்சித்தாலும் எதிர்பாராத நேரத்தில் நடக்கும் ஒன்றுதான் அதிர்ஷ்டம். அது எல்லாருக்கும் நடந்து விடாது.

அப்படியான ஒரு சம்பவம் துபாயில் நடந்துள்ளது.  துபையில் வசிக்கும் தமிழர்  மகேஷ்குமார் நடராஜன். இவர் துபையில் ஒரு நிறுவனத்தில் திட்ட மேலாளராக ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வருகிறார். 49 வயதான மகேஷ்குமாருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டில் லாட்டரி டிக்கெட் விற்பனை  ஏற்கனவே தடை செய்யப்பட்டு விட்டதால்  2000ம் ஆண்டுகளுக்கு பின்னர் பிறந்தவர்களுக்கு அது பற்றி தெரிய வாய்ப்பில்லை. மகேஷ்குமார் துபாய்க்கு சென்றது லாட்டரி டிக்கெட் இருப்பதை தெரிந்து கொண்டு அவர் லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். அவருக்கு துபையின் மிகப்பெரிய லாட்டரி குலுக்கலில் ஒன்றான ஃபாஸ்ட் கிராண்ட் லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது.

லாட்டரி டிக்கெட்டின் பரிசு எவ்வளவு தெரியுமா..?  அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் 25,000 திராம். அதாவது இந்திய மதிப்பில் மாதந்தோறும் ரூபாய் 5.6 லட்சம் வழங்கப்படும்.  ஆம்பூரைச் சேர்ந்த மகேஷ்குமார் 2019-ல் துபைக்கு 4 வருட ஒப்பந்த அடிப்படையில் துபாய்க்கு சென்றுள்ளார்.

பரிசு வென்ற பிறகு மகேஷ்குமார் இதுகுறித்து தெரிவித்தாவது, “என்னுடைய வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களைச் சந்தித்துள்ளேன். என் சமூகத்தைச் சார்ந்த பலர் படிப்பதற்கு உதவி செய்து தான் நான் படித்தேன். இந்தச் சமூகத்திற்கு திருப்பி செய்வதற்கான நேரம் இது. சமூகத்தில் தேவையுள்ளவர்களுக்கு நான் நிச்சயம் இந்தத் தொகையை வைத்து உதவி செய்வேன்.  மேலும் மகளின் படிப்புக்கு இதனைப் பயன்படுத்த உள்ளேன்” என்று  தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.