தமிழ்நாட்டிற்கு கூடுதலாக ரூ.400 கோடி ஒதுக்கிய நபார்டு-அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட்

கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக தமிழகத்திற்கு கூடுதலாக ரூ.400 கோடி வழங்கப்படும் என்று நபார்டு தலைவர் தெரிவித்துள்ளதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள நபார்டு தலைமை அலுவலகத்திற்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல்…

கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக தமிழகத்திற்கு கூடுதலாக ரூ.400 கோடி வழங்கப்படும் என்று நபார்டு தலைவர் தெரிவித்துள்ளதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள நபார்டு தலைமை அலுவலகத்திற்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பிப்ரவரி 14ஆம் தேதி சென்றிருந்தார். அங்கு நபார்டு தலைவர் கே.பி.ஷாஜியை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் விவசாயம் மற்றும் கூட்டுறவுச் சங்கம், கிராமப்புற மேம்பாடு தொடர்பான பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி விவாதித்துள்ளனர்.

கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, குறுகிய கால விளைபொருட்கள், வங்கிகளுக்கு மறுநிதியளிப்பு மற்றும் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனுக்கு தேவையான குறுகிய கால முதலீட்டுத் தேவை,  நீண்டகால முதலீட்டுத் தேவை போன்றவற்றுக்கு தமிழகத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக நபார்டு தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி குறித்த மதிப்பாய்வின் அடிப்படையில், அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற உங்கள் கோரிக்கையை ஏற்று 2023ஆம் நிதியாண்டுக்கான மொத்த ஒதுக்கீட்டை ரூ. 3,100 கோடியாக உயர்த்தி, தமிழ்நாட்டிற்கு ரூ. 400 கோடி கூடுதலாக வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/ptrmadurai/status/1626096471417434113?t=w9jH9hyH_Ts3zK8rkBPINw&s=08

இதுகுறித்து, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பதிவில், நபார்டு தலைவர் கே.பி.ஷாஜியை பிப்ரவரி 14ஆம் தேதி மும்பையில் சந்தித்தேன். அந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. 2023-ம் நிதியாண்டுக்கான மொத்த ஒதுக்கீட்டை  ரூ.3,100 கோடியாக உயர்த்தி, தமிழ்நாட்டிற்கு ரூ.400 கோடி கூடுதலாக வழங்கப்பட்டதற்கான அனுமதிக் கடிதம் கிடைத்துள்ளது. விரைவான நடவடிக்கைக்கு மிகுந்த நன்றி என பதிவிட்டுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.