வாக்காளர்களுக்கு ரூ. 4 ஆயிரம் – ஈ.வி.கே.எஸ். ஆதரவாளர்கள் மீது இன்பதுரை புகார்!

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு ரூ. 4,000 விநியோகிப்பதாக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை, தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு…

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு ரூ. 4,000 விநியோகிப்பதாக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை, தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடைமை ஆற்றி வருகின்றனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் உள்ள 238 வாக்குச்சாவடிகளிலும் இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு அன்னை சத்யா நகரில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு ரூ. 4, 000 விநியோகித்து வருவதாக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றும், ஊடகங்களிலும் இப்பிரச்னை தொடர்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது என்றும், எனவே, பணப்பட்டுவாடா செய்வதைத் தடுத்து, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.