மாணவர்கள் தொழில்முனைவோர்களாக உருவாக வேண்டும்- இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

மாணவர்கள் படித்து முடித்ததும் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். தொழில் முனைவோராக உருவாகி வேலை கொடுக்கும் இடத்திற்கு வர வேண்டும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறியுள்ளார். சென்னை…

மாணவர்கள் படித்து முடித்ததும் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். தொழில் முனைவோராக உருவாகி வேலை கொடுக்கும் இடத்திற்கு வர வேண்டும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறியுள்ளார்.

சென்னை வண்டலூர் அருகே கொளப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ராமானுஜர் பொறியியல்
கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக
முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு அறிவுரை வழங்கி பட்டங்களை வழங்கினார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், இன்று இஸ்ரோ பணிகள் நாட்டுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று நாம் அனுப்பிய செயற்கொள்கள் இரவு 7 மணி முதல் 9 மணி வரை 2 செயற்கோள்களின் செயல்பாட்டினை நிறுத்தினால் அதன் அருமை தெரியும்.தாய்மார்களால் 7 மணிக்கு ஒளிப்பரப்பாகும் எந்த நாடகமும் பார்க்க முடியாது.
கணினி செயல்பாடு முடங்கி விடும். சமூக வளைதளங்களை பயன்படுத்த முடியாது.
மாணவர்கள் இணையதள விளையாட்டுகளை கூட விளையாட முடியாது. ஒவ்வொருவரும் இன்று செயற்கைகோளின் செயல்பாட்டினை நம்பியே உள்ளனர் என்றார்.

அதேபோல் மாணவர்கள் படித்து முடித்ததும் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். மாணவர்கள் ஸ்டார்ட்அப் என புதிய தொழில் முனைவோராக உருவாகி, அவர்கள் வேலை கொடுக்கும் இடத்திற்கு வரவேண்டும்.

ஒவ்வொருவருக்கு தங்கள் விருப்பப்பட்ட துறையில் வேலை வாய்ப்பு கிடைக்குமா
என்றால் நிச்சயம் கிடைக்காது அதே சமயம் கிடைக்கும் துறையில் அர்ப்பணிப்புடன்
பணியாற்றினால் அதிலும் சாதிக்கலாம். ஆசிரியராக வேண்டும் என்பது தான் அதீத விருப்பம். ஆனால் கால சூழ்நிலை என்னை வேறு துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அதில் முழு முயற்சியாக அர்பணிப்பு, கடின உழைப்பு மூலம் அந்த துறையிலும் என்னால் சாதிக்க முடிந்ததாக கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.