ரூ.200 கோடி மோசடி வழக்கு-பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சம்மன்

200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய வழக்கில், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் செப்டம்பர் 26ஆம் தேதி…

200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய வழக்கில், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் செப்டம்பர் 26ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு டெல்லி நீதிமன்றம் புதன்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னதாக, நடிகை ஜாக்குலினின் பெயரை அமலாக்கத் துறை இந்த வழக்கில் சேர்த்திருந்தது.

சுகேஷ் சந்திரசேகர் மிரட்டி பணம் பறிப்பவர் என்பது ஜாக்குலினுக்கு தெரியும் என்றும் அவருக்கு உடந்தையாக ஜாக்குலின் இருந்தார் என்பதும் அமலாக்க இயக்குனரகம் கூறுகிறது.

முன்னதாக, சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலினுக்கு 10 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகளை அனுப்பியதை அமலாக்கத் துறை கண்டறிந்துள்ளது. அதனால் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க இயக்குனரகம் இதுவரை நடிகையின் 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது. ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்பு இருப்பதாக கூறி அமலாக்க இயக்குனரகம் பலமுறை விசாரணை நடத்தியது.

சுகேஷ் சந்திரசேகர் மீது 32 கிரிமினல் வழக்குகள் உள்ளதால், பல மாநில காவல்துறை மற்றும் மூன்று மத்திய ஏஜென்சிகள் – சிபிஐ, அமலாக்க இயக்குநரகம் மற்றும் வருமான வரி ஆகியவற்றால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

டெல்லி தொழிலதிபரின் மனைவியிடம் போலியான அழைப்பு மூலம் ரூ.215 கோடி பணம் பறித்ததாக சுகேஷ் சந்திரசேகர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அவர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். பிறகு அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் சுகேஷ் ​பிரதமர் அலுவலகம், சட்ட அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரி போல் நடித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பணம் பறித்துள்ளது தெரியவந்தது.

அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு ஜாமீன் வழங்குவதாகவும், அவர்களின் மருந்து வணிகத்தை நடத்துவதாகவும் சுகேஷ் தொலைபேசி வாயிலாக கூறியுள்ளார். அமமுக தலைவர் டிடிவி தினகரன் மீதான மோசடி வழக்கில் சுகேஷ் சிக்கியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக அவர் ஏப்ரல் 4ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.