25.5 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா

கங்கை நதியில் இடிந்து விழுந்த ரூ.1750 கோடி பாலம்; பீகாரில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!…

பீகார் மாநிலம் கங்கை நதிக்கு மேல் கட்டுமானப் பணியிலிருந்த அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் திடீரென இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. கிராமங்களையும் நகரங்களையும் இணைக்க புதிய கட்டமைப்புகள் தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் முனைப்புக் காட்டி வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி, பீகார் மாநிலம், பாகல்பூரில் இருந்து ககாரியாவை இணைக்கும் விதமாக, 3.1 கி.மீ., நீளத்துக்கு, பாலம் கட்ட, 2014 ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது. மொத்தம், ரூ. 1,710 கோடியில் இந்த பாலம் கட்டப்பட்டு வந்தது.

இப்பாலம் ஞாயிற்றுக்கிழமை காலை வீசிய, காற்று மற்றும் மழையால் இடிந்து விழுந்துள்ளது. இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. மோசமான வானிலையால், பாலத்தின் 4 மற்றும் 6வது தூண்களுக்கு இடையே, 100 அடி தூரத்துக்குப் பாலம் இடிந்து விழுந்தது.

இதை அங்குள்ள சிலர் தங்கள் கேமராவில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோல பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து இருந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

“விவசாயிகள் நலனே பிரதானம்” -பிரதமர் மோடி

G SaravanaKumar

கார்னிவல் திருவிழா – காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

G SaravanaKumar

டெல்டா வகை கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தும்: உலக சுகாதார அமைப்பு

Gayathri Venkatesan