தந்தையின் குடிப்பழக்கத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட சிறுமியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனது தந்தை குடி பழக்கத்தை விட வேண்டும் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உயிரிழந்த சிறுமியின் தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பாதிக்கும் ஊதியத்தைக் குடித்தே தீர்ப்பதால் வீட்டில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.
இது பல நாள் தொடரவே வேறு வழி தெரியாத சிறுமி தற்கொலை முடிவுக்கு வந்திருக்கிறார். ஆனால், குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட அந்தச் சிறுமி, இறப்பதற்கு முன் ஒரு உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
அதில், “என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. என் ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்தி குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை எப்போது காண்பேனோ, அப்பொழுது தான் என் ஆத்மா சாந்தியடையும்” என எழுதியுள்ளார்.
குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் தாலுகா காவல் துறையினர் சம்பவ
இடத்திற்குச் சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம்
அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை
நடத்தி வருகின்றனர்.
தந்தையின் குடிப்பழக்கத்தை விடக்கோரி மகள் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை
செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்துவதோடு, குடிப்பழக்கத்தால் ஒரு குடும்பத்தில் ஏற்படும் தீமையையும், தாக்கத்தையும் மிக ஆழமாகவே வெளிப்படுத்துகிறது சிறுமியின் தற்கொலை.