RRR திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சி – இணையத்தில் வைரல்!

ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சி ஒன்று இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்த காட்சியில் ராம் சரண் இடம் பெற்றிருக்கிறார். ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான …

ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சி ஒன்று இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்த காட்சியில் ராம் சரண் இடம் பெற்றிருக்கிறார்.

ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான  ஆர்ஆர்ஆர்  திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 3 மொழிகளில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது விழாவில்  சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்றது. மேலும் இத்திரைப்படம் சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான தேசிய விருது உட்பட 6 விருதுகளை வென்றுள்ளது.

இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தின் நீக்கப்பட்ட காட்சி ஒன்று இணையத்தில் பரவி உள்ளது. இந்த காட்சியில் ராம் சரண் இடம் பெற்றிருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. சினிமாவில் ராஜமவுலியின் பங்களிப்பை கூறும் விதமாக, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிலிம் கம்பானியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த “மார்டர்ன் மாஸ்டர்ஸ் (modern masters)” என்ற ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.