RRR படம் சிறப்பாக இருந்தது; ராஜமௌலியை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர் ஸ்பீல்பெர்க்

RRR படம் பார்த்த ஹாலிவுட் இயக்குநர் ஸ்பீல்பெர்க், RRR படம் சிறப்பாக இருந்தது என ராஜமௌலியை பாராட்டித்தள்ளிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆகியோர் ஜனவரி மாதம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஒரு விருந்தில் சிறிது நேரம் சந்தித்தனர். அந்த சந்திப்பில்…

RRR படம் பார்த்த ஹாலிவுட் இயக்குநர் ஸ்பீல்பெர்க், RRR படம் சிறப்பாக இருந்தது என ராஜமௌலியை பாராட்டித்தள்ளிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆகியோர் ஜனவரி மாதம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஒரு விருந்தில் சிறிது நேரம் சந்தித்தனர். அந்த சந்திப்பில் ராஜமௌலி, ஹாலிவுட் இயக்குநர் ஸ்பீல்பெர்க் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்தார்.

இந்நிலையில், ஸ்பீல்பெர்க்கின் சமீபத்தில் இயக்கிய இயக்குநரான தி ஃபேபல்மேன் திரைப்படத்தின் இந்திய வெளியீட்டிற்காக ப்ரோமோஷன பணிகளில் இரங்கியுள்ளார். அப்போது எஸ்.எஸ்.ராஜமௌலியுடனான ஒரு உரையாடலின் போது பேசிய ஸ்பீல்பெர்க், ” RRR படம் சிறப்பாக இருந்தது என்று நான் சொல்ல வேண்டும். நாம் சந்தித்தபோது நான் RRR பார்க்கவில்லை. கடந்த வாரம் பார்த்தேன். RRR ஆச்சரியமாக இருந்தது. எனக்கு மிகவும் பிடிக்கும். என் கண்களை நம்ப முடியவில்லை என அவர் கூறியதோடு ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் ஒட்டுமொத்த நடிகர்களின் நடிப்பையும் ஸ்பீல்பெர்க் பாராட்டினார்.

மேலும் எஸ்.எஸ்.ராஜமௌலியை வாழ்த்தினார். அதற்குப் பதிலளித்து ராஜமௌலி, நீங்கள் படத்தைப் பார்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார். பின் ஸ்பீல்பெர்க் ராஜமௌலியிடம் படம் மற்றும் அதன் தயாரிப்பைப் பற்றிப் பல கேள்விகளைக் கேட்க விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்கவும்: எதற்காக இந்த ‘டெடி டே’ கொண்டாடப்படுகிறது? 

தி ஃபேபல்மேன் திரைப்படத்தைப் பற்றி பேசுகையில், தி ஃபேபல்மேன் பிப்ரவரி 10 அன்று இந்தியாவில் வெளியிடப்பட்டது. கேப்ரியல் லாபெல்லே, மிச்செல் வில்லியம்ஸ், பால் டானோ, சேத் ரோஜென் மற்றும் ஜட் ஹிர்ஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வரவிருக்கும் 95வது அகாடமி விருதுகளில் ஏழு பரிந்துரைகளைப் பெற்றுள்ளது. சிறந்த இயக்குநர், சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகைக்கான விருது என பல முக்கிய பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் எம்.எம்.கீரவாணி இசையமைத்து சந்திரபோஸ் எழுதிய நாட்டு நாட்டு பாடல் அகாடமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இந்த திரைப்படம் ஹாலிவுட்டின் பல்வேறு விருது விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ளது. இதில் நாட்டு நாட்டுக்கான சிறந்த அசல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதும் அடங்கும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.