இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி 23 ரன்கள் வித்தியாசட்த்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது.
16-வது ஐபிஎல் தொடர் ரசிகர்களுகளின் எதிர்பார்ப்பிற்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாரம் இறுதி நாள் என்பதால் இன்று 2 போட்டிகள் நடைபெறும். அதன்படி முதல் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல் அணிகளும் மோதின. பெங்களூருவில் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வீசப்பட்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடக்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலி, டு பிளிஸ்சிஸ் ஆகியோர் களம் இறங்கினர். அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய இந்த ஜோடி அணியின் ரன்கள் 42 ரன்கள் இருந்த நிலையில் டு பிளிஸ்சிஸ் 22 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அணியின் கேப்டன் அரை சதம் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களமிறங்கியது.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், பிரித்வி ஷா ஜோடி களமிறங்கியது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதல் ஓவரின் 3-வது பந்தில் பிரித்விஷா ரன் அவுட்டானார். இதனை அடுத்து வார்னருடன் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷும் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். 2 ஓவரில் 2 ரன்கள் 2 விக்கெட் என பரிதாபமாக நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆடத் தொடங்கியது.
அடுத்தடுத்து களம் இறங்கிய வீரர்கள் சரிவர ஆடாததால் 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்து டெல்லி அணி படுதோல்வி அடைந்தது. இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது பெங்களூர் அணியில் அறிமுக வீரரான வைசக் விஜயகுமார் 3 விக்கெட்டையும், சிராஜ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.







