சதமடித்த ரோஹித் சர்மா: புதிய சாதனை படைத்து அசத்தல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்ததன் மூலம் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கி…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்ததன் மூலம் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அதன் பிறகு களமிறங்கிய இந்தியா அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. முதல்நாள் முடிவில் ரோஹித் சர்மா அரைசதத்துடன் களத்தில் இருந்தார். இன்று மீண்டும் போட்டி தொடங்கியது. தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய யின் ரோஹித் சர்மா சதமடித்தார். 2 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகள் இதில் அடங்கும். 120 ரன்கள் அடித்திருந்த போது கம்மின்ஸ் பந்தில் போல்டாகி வெளியேறினார்.

அண்மை செய்தி –  உத்தரகாண்டில் இளைஞர்கள் போராட்டத்தில் தடியடி- விசாரணைக்கு உத்தரவு

இன்றைய போட்டியில் சதமடித்ததன் மூலம் ரோஹித் சர்மா தனது 9வது சதத்தை பதிவு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டி, டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று வடிவத்திலும் சதமடித்த முதல் இந்தியா கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். இந்தியா அணி தற்போது 7 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்களுடன் விளையாடி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.