முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா அபார வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா – இந்திய அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் நாக்பூரில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஜடேஜா சுழலை எதிர்கொள்ளமுடியாமல் ஆஸ்திரேலிய அணி திணறியது. டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ரென்ஷாவ் உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணியில் மார்னஸ் லபுஷேன் மட்டும் அதிகபட்சமாக 49 ரன்களை அடித்திருந்தார். முதல் நாள் ஆட்டத்திலேயே 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலிய அணி இழந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி இந்திய அணியில் ரோஹித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சதமடித்த ரோஹித் சர்மா 120 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் ஜடேஜா-அக்சர் படேல் ஒரு சிறப்பான பார்ட்னர்ஷிப்பை இந்திய அணிக்கு அமைத்து கொடுத்தனர். ஜடேஜா 70 ரனகள் அடித்து முர்பி பந்தில் போல்டாகி வெளியேறியனார். அக்சர் படேல் 84 ரன்கள் அடித்து கம்மின்ஸ் பந்தில் போல்டாகி வெளியேறினார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் அடித்தது. ஆஸ்திரேலிய அணியில் முர்பி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அண்மைச் செய்தி: அதானி விவகாரம் பாஜகவை படுமோசமாக வீழ்த்தும் -முரசொலி விமர்சனம்

223 ரன்கள் பின்னடைவுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி ஆடத் தொடங்கியது. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்களால் அஸ்வினின் சுழலை எதிர்கொள்ள முடியவில்லை. தொடக்கவீரர்களான கவாஜா மற்றும் வார்னர் இருவரையும் சொற்ப ரன்னில் அஸ்வின் வீழ்த்தினார். ரென்ஷாவ், பீட்டர் ஹாண்ட்ஸ்காப், அலெக்ஸ் காரே ஆகியோரையும் அடுத்தடுத்து அஸ்வின் வீழ்த்தினார். மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற ஸ்மித் மட்டும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருந்தபோதும் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலிய அணி 91 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி சார்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும் முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் 1-0 என்று இந்திய அணி முன்னணியில் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிலை கடத்தலில் இபிஎஸ் பங்கு என்ன என்பதை பொன்மாணிக்கவேல் விளக்க வேண்டும் – புகழேந்தி

NAMBIRAJAN

சிம்பு படம் வெளியாக தடை இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்

EZHILARASAN D

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ்களை வழங்க தேவையில்லை – குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி

Web Editor