சென்னையில் ரோபோடிக் கண்காட்சி…ஏராளமானோர் பங்கேற்பு…

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ரோபோடிக் கண்காட்சி  நடைபெற்றது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற  ரோபோடிக் கண்காட்சியில் ஆக்ஸிஸ் குளோபல் ஆட்டோமேஷன் என்கிற கம்பெனியும் கலந்து கொண்டது. இதில் ரோபோடிக் வெல்டிங் அடித்தல்,…

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ரோபோடிக் கண்காட்சி  நடைபெற்றது.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற  ரோபோடிக் கண்காட்சியில் ஆக்ஸிஸ் குளோபல் ஆட்டோமேஷன் என்கிற கம்பெனியும் கலந்து கொண்டது. இதில் ரோபோடிக் வெல்டிங் அடித்தல், ஆண்ட் வொர்க் செய்தல், வர்ணம் பூசுதல் ஆகிய
பணிகளை செய்யும் ரோபோட்டிக் மெஷின்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஆக்சிஸ் குளோபல் ஆட்டோமேசன் இயக்குநர் எழில் மாறன் கூறியதாவது:

நாங்கள் கடந்த 15 வருடங்களாக ரோபோட்டிக் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்தியாவின் ரோபோடிக் பயிற்சி மையத்தை நாங்கள் தான் முதன் முதலில் உருவாக்கினோம், இந்த மையம் நான்கு வருடத்தில்  வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இங்கு அதிக அளவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் ரோபோக்கள் தயார் செய்ய மாணவர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கின்றோம்.

சீனா சந்தை பொருட்களை விட தற்போது இந்திய சந்தை பொருட்கள் உயர்வடைந்து
வருகிறது. தற்போது வரை ஆண்டுக்கு பத்தாயிரம் ரோபோட்கள் மட்டுமே இந்திய
சந்தையில் விற்பனை ஆகிறது. ஆனால் மற்ற நாட்டு ரோபோக்களை விட இந்திய நாட்டு
ரோபோட்க்கள் அதிகம் பேர் வாங்குகின்றனர்.

டிப்ளமோ இன்ஜினியரிங் மாணவர்கள் வெறும் டிகிரியை மட்டும் வைத்துக்கொள்ளாமல்
அவர்களின் திறன்களையும் வளர்த்து கொள்ள வேண்டும். நான் முதல்வன் திட்டத்தில்
71 ஐடிஐ தொழிற்கல்வியை புதுப்பித்துள்ளனர்.

சென்னையில் உள்ள பயிற்சி மையத்தில் 300 முதல் 400 மாணவர்கள் தினமும் பயிற்சி
பெற்று வருகின்றனர். தற்போது உலக சந்தையில் இந்திய இன்ஜினியர்கள் ஜப்பான்
இன்ஜினியர்களுக்கு தான் போட்டி நிலவுகிறது. உலக தரத்தில் சீனா ஜப்பான்
இன்ஜினியரிங்கள விட இந்தியர்கள் அதிக திறன் உடையவர்களாக இருக்க வேண்டும் என
கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.