முக்கியச் செய்திகள் தமிழகம்

நிபா வைரஸ் எதிரொலி; தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

கேரளாவில் நிபா வைரஸ் எதிரொலியாக தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் சத்தமங்கலம் கிராத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு கடந்த 3ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மூளை அழற்சி மற்றும் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மத்திய அரசின் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையக் குழுவினர் கேரளாவிற்கு விரைந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறித்தியுள்ளார். குறிப்பாக கேரள கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்களின் வருகையை தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தொண்டர் கட்டிய கோயிலில் பிரதமர் மோடி சிலை திடீர் அகற்றம்

Gayathri Venkatesan

சீன ஆக்சிஜனை சுவாசிக்கவுள்ள தமிழர்கள்!

ஒரு அங்குலம் நிலத்தைக் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்!

Ezhilarasan