#MissUniverseIndia2024 | குஜராத்தைச் சேர்ந்த ரியா சிங்கா வென்று அசத்தல்!

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை குஜராத்தைச் சேர்ந்த ரியா சிங்கா வென்றுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று (செப்.22) மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 இறுதிப்போட்டி வெகு விமரிசையாக நடந்தது. இந்த போட்டியில்,…

Riya Singha , Gujarat, won , ,Miss Universe India

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை குஜராத்தைச் சேர்ந்த ரியா சிங்கா வென்றுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று (செப்.22) மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 இறுதிப்போட்டி வெகு விமரிசையாக நடந்தது. இந்த போட்டியில், 51 பேர் கலந்துகொண்டனர். இந்த இறுதி போட்டியில், குஜராத்தைச் சேர்ந்த ரியா சிங்கா (19), 2024 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவாக மகுடம் சூட்டப்பட்டார்.

முதல் ரன்னர் அப் இடத்தை பிரஞ்சல் பிரியா, 2வது ரன்னர் அப் இடத்தை சாவி வெர்ஜ், 3வது ரன்னர் அப் இடத்தை சுஷ்மிதா ராய், 4வது இடத்தை ரூஃபுஸானோ விஸோ ஆகியோர் பிடித்தனர்.மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்றதை அடுத்து வரும் நவம்பர் மாதம் மெக்சிகோவில் நடக்கவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் 2024 போட்டியில் இந்தியா சார்பில் ரியா சிங்க கலந்துகொள்கிறார்.

இதையும் படியுங்கள் : நாட்டிலேயே முதல் முறையாக #kerala-வில் 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு உறுதி | பாதிக்கப்பட்ட இளைஞருக்கு தீவிர சிகிச்சை!

வெற்றி குறித்து ரியா சிங்கா, ”நான் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டம் வென்றுள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் இந்த நிலையை அடைய கடினமாக உழைத்துள்ளேன். மேலும் முந்தைய வெற்றியாளர்களால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.