குரங்கு அம்மைக்கான ஆபத்து மிதமாகவே உள்ளது: WHO

தென்கிழக்கு ஆசியாவில் குரங்கு அம்மைக்கான ஆபத்து மிதமாகவே இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் குரங்கு அம்மை பரவி வருவதை அடுத்து, அந்த நோய் சர்வதேச மருத்துவ அவசரநிலையை ஏற்படுத்தக்கூடியது உலக…

தென்கிழக்கு ஆசியாவில் குரங்கு அம்மைக்கான ஆபத்து மிதமாகவே இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் குரங்கு அம்மை பரவி வருவதை அடுத்து, அந்த நோய் சர்வதேச மருத்துவ அவசரநிலையை ஏற்படுத்தக்கூடியது உலக சுகாதார நிறுவனம் நேற்று அறிவித்தது.

இந்நிலையில், இந்த நோயின் பாதிப்பு குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்கான இயக்குநர் பூனம் கேட்ரபால் சிங் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

அப்போது, உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வகத் தகவல்கள் மற்றும் நிபுணர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், குரங்கு அம்மை நோயின் பாதிப்பு குறித்து உலக சுகாதார நிறுவனம் மதிப்பாய்வு செய்து வருவதாகத் தெரிவித்த பூனம் கேட்ரபால் சிங், இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தில் குரங்கு  அம்மைக்கான ஆபத்து மிதமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுடன் உடலுறவு கொள்ளும்போதோ, அவர்கள் உடுத்திய துணிகளை – அதில் நோய் துகல்கள் இருக்கும்போது – அணியும்போதோ, அவர்கள் படுத்த படுக்கையில் படுக்கும்போதோ பிறருக்கு அந்த நோய் பரவும் ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ள பூனம் கேட்ரபால் சிங், குரங்கு அம்மை பரவத் தொடங்கியது முதல் உலக நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் ஆதரவு அளித்து வருவதாகக் கூறியுள்ளார்.

நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ள பூனம் கேட்ரபால் சிங், இந்த நோய் பரவுவதை தடுப்பதற்கான நமது பதில் நடவடிக்கை அறிவுப்பூர்வமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.