மதுரை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி!

சென்னையில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சர்வதேச செஸ் போட்டி நடைபெறுகிறது. செஸ் போட்டிக்காக மதுரை வந்த ஒலிம்பியாட் ஜோதிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மீனாட்சி அம்மன் கோவில், விளக்கு தூண்,…

சென்னையில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சர்வதேச செஸ் போட்டி நடைபெறுகிறது.

செஸ் போட்டிக்காக மதுரை வந்த ஒலிம்பியாட் ஜோதிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மீனாட்சி அம்மன் கோவில், விளக்கு தூண், தெப்பக்குளம், அண்ணா நகர் வழியாக ஒலிம்பியாட் ஜோதி மாவட்ட விளையாட்டு மைதானம் வந்தடைந்தது.

ஒலிம்பியாட் ஜோதிக்கு அமைச்சர்கள் கே.ஆர்.பெரிய கருப்பன், பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் வரவேற்றனர்.

நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், “செஸ் ஒலிம்பியாட் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற வேண்டியது. போரின் காரணமாக நடைபெறவில்லை. தமிழக முதல்வரின் துரித நடவடிக்கையால் தமிழகத்தின் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுகிறது. தமிழகத்தில் சர்வதேச செஸ் போட்டி நடப்பது மிகப்பெரிய கவுரவம்” என்றார்.

தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதன்முறையாக பிரத்யேகமாக ஒலிம்பியாட் தீபம் ஏற்றப்படுவது இதுவே முதன்முறையாகும். சென்னையில் நடைபெறவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பாடலும் வெளியானது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த செஸ் போட்டிகளின் பெருமையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பார்க்கபடுகிறது. பல்வேறு நாடுகளின் போட்டிகளுக்கு இடையே இந்தியா முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தும் வாய்ப்பை பெற்றிருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.