#KH233… கமலுடன் கைகோர்க்கும் பிரபலங்கள் -லேட்டஸ்ட் அப்டேட்!

கமல் 233 திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிகர்கள் ஜெயம் ரவியும் துல்கர் சல்மானும் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.  சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர் கொண்ட பார்வை, வலிமை, துணிவு…

கமல் 233 திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிகர்கள் ஜெயம் ரவியும் துல்கர் சல்மானும் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர் கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களைத் தொடர்ந்து எச். வினோத் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்துள்ளார். இந்தியன் 2 படத்தை அடுத்து நடிகர் கமல்ஹாசன் எச்.வினோத் இயக்கத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் படப்பிடிற்கான வேலைகளுக்கான தொடக்க பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக படத்தின் அறிவிப்பு குறித்தான வீடியோவில் கமல் தீப்பந்தம் ஏந்தியபடி இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.  இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ராஜ்கமல் நிறுவனத்தின் 52-வது படமாக இப்படம் உருவாகிறது கமல்ஹாசனின் 233ஆவது படம்.

தன் முதல் படமான சதுரங்க வேட்டை தொடங்கி எச்.வினோத் தொடர்ந்து சமூக பொறுப்புணர்வு கொண்ட கதைகளை இயக்கி வரும் நிலையில், இந்தப் படமும் அவ்வாறே இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின. மேலும் முன்னதாக நெல் ஜெயராமன் மற்றும், பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய உறுப்பினர்களுடன் கமல் – ஹெச்.வினோத் இருவரும் கலந்துரையாடிய நிலையில், அவரைப் பற்றிய கதையாக இருக்கலாம்  எனவும் கூறப்பட்டது.

https://twitter.com/RKFI/status/1699656596794814508

தற்போது இந்தப் படத்திற்கான பயிற்சிகளை நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ளதை தெரிவிக்கும் விதமான ராஜ்கமல் நிறுவனம் கன்ஸ் & கட்ஸ் என்கிற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டது. இந்த வீடியோவில் பல ரகமான துப்பாக்கிகளை பயன்படுத்தி கமல்ஹாசன் பயிற்சி எடுத்து வருகிறார். விக்ரம் படத்தை போல் இந்தப் படமும் துப்பாக்கி தோட்டா என மிரட்டும் ஆக்‌ஷன் காட்சிகளால் நிறைந்திருக்கும் ஒரு படமாக இந்தப் படம் இருக்கும் என்று தெரியவருகிறது.

இந்நிலையில், இந்நிலையில், கமல் – 233 படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிகர்கள் ஜெயம் ரவியும் துல்கர் சல்மானும் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.  கமலின் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை தூண்டக்கூடிய ஒரு தகவலாக அமைந்திருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.