கஜானாவிற்கு வராமல் சிலர் பாக்கெட்டிற்கு செல்லும் வருவாய் – பிரவீன் சக்கரவர்த்தி பேட்டி

அரசின் வருவாய் கஜானாவிற்கு வராமல் சிலர் பாக்கெட்டிற்கு சென்று விட்டது என்று காங்கிரஸ் எம்.பி பிரவீன்சக்கரவர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி பிரவின் சக்கரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணியில் போட்டியிடுவோம்.

நிதி நிலை குறித்து தமிழக அரசின் வெள்ளை அறிக்கை அதிக கடன் சுமை இருப்பதை காட்டுகிறது. ரூ.100 வருவாயில் ரூ.22 வட்டிக்கும் ரூ.40 கட்டாய செலவினத்திற்கும் செல்கிறது.

மீதமுள்ள தொகையில் மக்கள் பணிகள் எப்படி செய்ய முடியும்…? ” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பிற மாநிலங்களை விட தமிழ்நாடு தான் மோசமான வட்டி சுமையில் உள்ளது. வருவாய் கஜானாவிற்கு வராமல் சிலர் பாக்கெட்டிற்கு செல்கிறது. அதை தடுத்தாலே சூழ் நிலை மாறும். வருவாய் கஜானாவிற்கு வந்தாலே சமளித்துவிடுவார்கள்” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.