முக்கியச் செய்திகள் தமிழகம்

மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு மறுசீரமைப்பு – அரசாணை வெளியீடு

மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு மறுசீரமைப்பு குறித்து அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

மாநில அளவிலான தளவாடங்கள், வேளாண்மை பொருட்கள் ஏற்றுமதியில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க ஏற்றுமதி மேம்பாட்டு குழு உருவாக்கப்படும் என கடந்த செப்.23ல் மாநில அரசு அறிவித்திருந்தது.

இதனையடுத்து தற்போது இந்த ஏற்றுமதி மேம்பாட்டுக்குழுவை மறுசீரமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த குழு மாநில அளவிலான தளவாடங்கள், வேளாண்மை பொருட்கள் ஏற்றுமதியில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கும்.

தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் தொழில்துறை, நிதித்துறை, சிறுகுறு நடுத்தர தொழில்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த முதன்மைச் செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய ஏற்றுமதி நிறுவனத்தின் தலைவரான சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதி அசோசியேசன் தலைவரான ராஜா சண்முகம், கடல் உணவு ஏற்றுமதி அசோசியேசன் உள்ளிட்ட பல்வேறு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் மேம்பாட்டு குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குழு ஆறு மாதத்திற்கு ஒரு முறை கூடி ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான உத்திகளை வகுக்கும். அதே போல இக்குழு 2 மாதங்களுக்கு ஒரு முறை கூடி மேம்பாட்டுக்குழு தலைவருக்கு அறிக்கை அளிக்கும்.

மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து தமிழ்நாட்டின் ஏற்றுமதியை அதிகரிப்பது இந்த குழுவின் முக்கிய பணியாக இருக்கும்.

Advertisement:
SHARE

Related posts

”வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளிக்க கமல் மறுப்பு தெரிவித்ததால் இந்த முடிவெடுத்தேன்”- அருணாச்சலம்!

Jayapriya

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்த கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்!

Halley karthi

பாஜகவில் இணைந்தார் முன்னாள் திரிணாமூல் எம்.பி தினேஷ் திரிவேதி!

Halley karthi