வேளாண் சட்டங்களுக்கு எதிரான சட்டமன்ற தீர்மானம் மக்களை ஏமாற்றும் செயல் என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி விமர்சித்துள்ளார்.
சென்னை தி.நகர் பாஜக அலுவலகத்தில் பேட்டியளித்த அவர், “நாடாளுமன்றத்தில் எதையும் பேசாமல், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. சட்டமன்ற தீர்மானம் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. தேர்தல் வாக்குறுதியில் எதையெல்லாம் நடைமுறைப்படுத்த முடியுமோ அதை மட்டுமே செயல்படுத்த வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
மேலும், “நீட் தேர்வு போல், வேளாண் சட்ட விவகாரத்திலும் மக்களை ஏமாற்றுகிறது திமுக. விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் பரிந்துரைகள் அடிப்படையில்தான் வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. சுவாமிநாதன் பாஜக உறுப்பினர் அல்ல. அதை எதிர்ப்பது சரியல்ல. திமுக தலைவராக பொறுப்பேற்று 3 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதால் தமிழ்நாட்டுக்கு எந்தவித நன்மையும் இல்லை. ஸ்டாலினுக்குதான் அது பயன். சட்டமன்ற தேர்தலில் பெருவெற்றியெல்லாம் பெறவில்லை. மெஜாரிட்டியை விட சில இடங்கள் அதிகம் அவ்வளவுதான்.” என துரைசாமி தெரிவித்துள்ளார்.








