பழங்கால எகிப்தியர்களின் 2,000 வருட பழமையான மம்மிஃபிகேஷன் குறித்த ரகசியத்தின் பல உண்மைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நீண்ட காலமாக, உலகம் எகிப்தில் உள்ள தொல்பொருள் கண்டுபிடிப்புகளை ஆர்வத்துடன் பார்த்தது வருகிறது. மம்மிகள் என்று அழைக்கப்படும் பாதுகாக்கப்பட்ட இந்த இறந்த உடல்களை விட வேறு எதுவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்ததில்லை.
எகிப்தின் இறந்தவர்களை மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்ட மம்மிஃபிகேஷன் நடைமுறையின் வேதியியலை ஆராய்ச்சியாளர்கள் இப்போது பல கட்ட ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டுபிடித்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள் வேதியியலையும், வழக்கத்திற்கு மாறான சில பொருட்களின் தொகுப்பையும் பயன்படுத்தி மம்மிஃபிகேஷன் நடைமுறையை அவர்கள் எப்படிச் செய்தார்கள் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான இந்த உடல்களின் ஆய்வில் மனித திசுக்களைப் பாதுகாக்கவும், சிதைவு துர்நாற்றத்தைத் தடுக்கவும் பயன்படுத்தப்பட்ட பொருட்களில் தோராயமாக ஒரு டஜன் அடையாளம் காணப்பட்டுள்ளன. நுண்ணுயிர் உயிரியலைப் பற்றி தற்போது இருக்கும் புரிதலுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே மம்மிஃபிகேஷன் நடைமுறையை அவர்கள் செய்திருப்பது ஆராய்ச்சியாளர்களை வியப்பிற்கு உள்ளாக்கியது.
பழங்கால எகிப்தியர்களுக்கு இறந்தவர்களின் உடலைப் பாதுகாக்க என்ன பொருட்கள் உதவும் என்பது பற்றிய மேம்பட்ட அறிவை அவர்களின் செய்முறை, ஆராய்ச்சியில் வெளிப்பட்டுள்ளது. செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் பொருள் உலகின் தொலைதூரப் பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டது. சில வெளிப்படையாகத் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான பொருட்கள் எகிப்துக்கு வெளியே இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார். சிடார் எண்ணெய், இளநீர் மற்றும் சைப்ரஸ் எண்ணெய் மற்றும் தார், பிற்றுமின் மற்றும் ஆலிவ் எண்ணெய் உட்படக் கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படுத்தியது என்னவென்றால், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள காடுகளிலிருந்து பெறப்பட்ட பொருட்கள், வெப்பமண்டல தென்கிழக்கு ஆசியாவில் மட்டுமே வளரும் டம்மர் மரத்தின் பசை மற்றும் தென்கிழக்கு ஆசியா அல்லது வெப்பமண்டல ஆப்பிரிக்காவிலிருந்து வந்த எலிமி மரத்தின் பிசின் ஆகியவைவரை இவர்கள் கண்டறிந்து இப்பத்து வியக்கவைத்துள்ளது.
இந்த ரெசின்கள் மிகப் பெரிய தொலைவில் வர்த்தகம் செய்யப்பட்டன என்பதையும், எகிப்திய மம்மிஃபிகேஷன் ஆரம்பக்கால உலகமயமாக்கல் மற்றும் உலகளாவிய வர்த்தகத்திற்கு வழி வகுத்துள்ளது என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.
உப்புக்களால் உடலை உலர்த்திய பிறகு, உடல் முழுவதும் பிசின் அபிஷேகம் செய்யும் போது மந்திரங்கள் மற்றும் பாடல்களை உச்சரிப்பார்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். சிடார் எண்ணெய், இளநீர் மற்றும் சைப்ரஸ் எண்ணெய் மற்றும் விலங்குகளின் கொழுப்புகளின் கலவை, எலிமி பிசின், பிஸ்தா பிசின், ஜூனிபர் அல்லது சைப்ரஸின் துணை தயாரிப்புகள் மற்றும் தேன் மெழுகு போன்ற பொருட்கள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்தவரின் உடலில் பூசப்பட்டுள்ளன.
இவற்றிற்கும் மேல் சில பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவை இனி கண்டுபிடிக்கப்படும் என்றும் மம்மிஃபிகேஷனனின் சிக்கலான இரகசிய செயல்முறையை வருங்கால ஆய்வின்மூலம் அவிழ்க்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.







