350 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த டோடோ பறவையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர்.
1662 ஆம் ஆண்டில் தான் இருதியாக பறக்கும் தன்மை இல்லாத பறவையான டோடோவை மனிதர்கள் கடைசியாகப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அன்றிலிருந்து அப்பறவை அழிந்து 350 ஆண்டுகளுக்கும் மேலாகவிட்ட நிலையில் அந்த இனத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர்.
இந்தியப் பெருங்கடலில் மடகாஸ்கருக்குக் கிழக்கே உள்ள மொரிஷியஸ் தீவில் இந்தப் பறவை கடைசியாகப் பார்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பறவை இப்பகுதியில் மட்டுமே வாழ்த்து வந்த நிலையில், 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் மனிதர்கள் இப்பகுதிக்கு வந்த பிறகு முற்றிலும் அழிந்து போனது. மனிதர்கள் தங்கள் சுற்றுச்சூழலை ஆக்கிரமித்தபோதும், குரங்குகள் மற்றும் எலிகள் உள்ளிட்ட பிற உயிரினங்களால் வேட்டையாடப்பட்டதுடன் கடல் மட்டத்தின் உயர்வாலும் இந்த பரவை இனம் அழிந்ததாகக் கூறப்படுகிறது.
எரிமலை தீவு மொரிஷியஸ் டோடோ பறவையின் ஒரே வீடு என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். முதலில் பரக்கும் தன்மை கொண்ட இந்த பறவை இனம் காலப்போக்கில் பறக்க முடியாததாக மாறியதால் ஆபத்துக் காலத்தில் அவற்றால் தப்பிக்க இயலாமல் போனதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஜீன் எடிட்டிங் நிறுவனம் கோலோச்சல் பயோசயின்ஸ் இந்த பறவையை உயிர்ப்பிக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.