முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம் தமிழகம்

வரும் காலங்களில் மரணத்தை வெல்வது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் -இஸ்ரோ தலைவர்

மனிதனின் முக்கிய ஆசைகளில் ஒன்று மரணத்தை வெல்வது, அதை எப்படி சாத்தியமாக்குவது என்பது தான் வரும் காலங்களில் முன்னணி ஆராட்சியாக இருக்கும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசினார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரக்கோவில் பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 30வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட இஸ்ரோதலைவர் சோம்நாத் பட்டதாரி மாணவ மாணவியருக்குப் பட்டம் வழங்கினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது சொந்த விண்கலங்களைச் சுற்றுப்பாதையில் வைக்கப் பூமியின் ஈர்ப்பு புலத்தைக் கடந்து பயணிக்க நமது சொந்த ஏவுகணை வாகனங்களைப் பயன்படுத்தும் நாடு என்பதில் பெருமை கொள்கிறேன் என்றார்.

மேலும், வரும் காலங்களில் கலை ,அறிவியல், சமூக அறிவியல் போன்ற துறைகளில் அதிக வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. அது தான் உங்கள் தொழில்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்.பசி மற்றும் நோயின் தாக்கங்களிலிருந்து கடந்த 50 ஆண்டுகளில் வெற்றிகண்டுள்ளோம். மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் கணிசமாக அதிகரித்துள்ளது என கூறினார்.

மனிதனின் முக்கிய ஆசைகளில் ஒன்று மரணத்தை வெல்வது,அதை எப்படி சாத்தியமாக்குவது என்பது தான் வரும் காலங்களில் முன்னணி ஆராட்சியாக இருக்கும். வரும் கால ஆராட்சிகள் பொறியியல் மற்றும் மனித உறுப்புக்களை மாற்றுவதற்கான தொழினுட்பங்களில் மாற்றங்கள் தென்படும். இருந்தாலும் மருத்துவர் கள் மற்றும் வழக்கறிஞர்களின் தொழில் அறிவார்ந்த இயந்திரங்களால் கைப்பற்றப்படும் என பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக அஜய் பாது நியமனம்

EZHILARASAN D

நேபாள தேர்தல்; 60 சதவீத வாக்குகள் பதிவு

G SaravanaKumar

லோகி- கமலின் விக்ரமால் தள்ளிப்போன யானை!

Vel Prasanth