ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பிரதிநிதித்துவத்தை வளரும் நாடுகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் – இந்திய பிரதிநிதி வலியுறுத்தல்

5 நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் ஐநா சாசனம், மற்ற நாடுகளுக்கு எப்படி பயனளிக்கும் என ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசிரா கம்போஜ் கேள்வி எழுப்பியுள்ளார். நியூயார்க்கில் ஐநா பாதுகாப்பு…

5 நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் ஐநா சாசனம், மற்ற நாடுகளுக்கு எப்படி பயனளிக்கும் என ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசிரா கம்போஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நியூயார்க்கில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஐநா சாசனத்தின் கொள்கை பாதுகாப்பு குறித்த விவாதிக்கப்பட்டது. இதில் பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசிரா காம்போஜ், ஐநாவில் உள்ள 5 நிரந்த உறுப்பு நாடுகளுக்கு, மீதமுள்ள 188 உறுப்பு நாடுகளின் கூட்டு விருப்பத்தை புறக்கணிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : வேங்கைவயல் விவகாரம் – டிஎன்ஏ பரிசோதனைக்கு வர 8 பேர் மறுப்பு!

மேலும், கொரோனா தொற்று, உக்ரைன் மோதல் போன்ற சமகால சவால்களுக்கு பதிலளிப்பதில் ஐநாவின் பலதரப்பு அமைப்பு தோல்வி அடைந்துள்ளதாகவும் ருசிரா கம்போஜ் கூறினார்.

தீவிரவாதம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட சவால்கள் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை குறைத்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் செயல்திறன் மற்றும் பிரதிநிதித்துவத்தை வளரும் நாடுகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.