முக்கியச் செய்திகள் தமிழகம்

வேளச்சேரி தொகுதியில் வாக்குச்சாவடி எண்-92 ல் மறு வாக்குப்பதிவு!

வேளச்சேரி தொகுதிக்கான 92ஆம் எண் வாக்குச்சாவடியில் வரும் 17ஆம் தேதி காலை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 6ம் தேதி ஓரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு நாளன்று சென்னை வேளச்சேரியில் மாநகராட்சி ஊழியர்கள் 3 பேர் வாக்குப்பதிவு எந்திரங்களை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், உரிய பாதுகாப்பு இல்லாமல் வாக்கு எந்திரங்களை எடுத்துச் சென்றதாக ஊழியர்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், அரசியல் கட்சியினரின் கோரிக்கையை ஏற்று வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 92ஆம் எண் வாக்குச்சாவடியில் வருகிற 17ஆம் தேதி மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 6ஆம் தேதி நடைபெற்றதைபோல் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

Ezhilarasan

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட 22 வயது மாணவி கைது!

Jayapriya

சூரி ஹீரோவாக அறிமுகமாகியுள்ள விடுதலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Saravana Kumar